Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 21 May 2025
webdunia

எனக்கு வேலை வந்துவிட்டது: ரோகித் சர்மா குதுகலம்!!

Advertiesment
ரோகித் சர்மா
, வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (13:25 IST)
இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது கவுரவத்தை அளிப்பதாக ரோகித் சர்மா குதுகலத்துடன் தெரிவித்துள்ளார்.


 
 
இலங்கை சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது, அடுத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
 
கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. தோனியின் தேர்வுக்கு பல விமர்சனங்களும் எழுந்தது.
 
கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என கூறப்பட்டது.
 
ஆனால், கோலி ஓய்வை மறுத்த காரணத்தால் ரோகித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ரோகித் சர்மா கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணிக்காக விளையாடினால் போதும் என்று நினைத்தேன், ஆனால் தற்போது துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளேன்.
 
புதிய வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்த விரும்புவேன். அதேபோல்தான் இதுவும். வரும் 20 ஆம் தேதி முதல் எனக்கு வேலை வந்துவிட்டது. இந்த தருணங்களை ரசித்து விளையாட திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுவராஜ், ரெய்னா நீக்கம் குறித்து வெளியான காரணம்!