Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கோலிக்கு ஆப்பு வைக்க தயாரான ரோகித்

கோலிக்கு ஆப்பு வைக்க தயாரான ரோகித்
, சனி, 23 டிசம்பர் 2017 (11:53 IST)
கோலி ஓய்வில் இருப்பதால் இலக்கைக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தற்காலிக கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார்.

 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் முடிந்த பின் ஓய்வில் இருக்கிறார். இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கேப்டனாக நியமிக்கப்பட்டதும் ரோகித் சர்மா, கோலி போல் அணிக்காக ரன்கள் குவிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். ஒருநாள் போட்டி தொடரில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 35 பந்துகளில் அதிவே சதம் விளாசினார்.
 
இவரது பங்களிப்பு அணிக்கு மேலும் பலத்தை கொடுத்தது. இதனால் நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் கோலி கேப்டனாக செயல்பட்டாலும், இக்கட்டான சூழ்நிலைகளில் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வது வழக்கம்.
 
இந்திய அணியின் வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர். பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவை இரண்டிலும் இந்திய அணி சிறப்பாக உள்ளது. இதனால் கேப்டன் பொறுப்பில் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளது. யார் கேப்டனாக பொறுப்பேற்றாலும் தோனி உதவியுடன் தான் செயல்படுகின்றனர்.
 
இந்நிலையில் விராட் கோலி கேப்டனாக தோல்வியை சந்தித்து நெருக்கடிக்கு தள்ளப்பட்டால் அடுத்து கேப்டன் பதவி ரோகித் சர்மாவுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. ரோகித் சர்மாவும் அணிக்காக தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படுகிறார். இதனால் விராட் கோலியின் வெற்றிப்பயணத்தை பொறுத்தே அவரது கேப்டன் பதவி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி