இந்திய அணியின் மூத்த சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினை கேப்டன் ரோஹித் ஷர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான அஸ்வின், சில ஆண்டுகளாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு டி 20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. இதையடுத்து நேற்றைய போட்டியில் அவர் களமிறக்கப்பட்டார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்காக சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்.
அதன் பின்னர் அவர் விளையாடிய உலகக்கோப்பை போட்டிகள் மற்றும் நியுசிலாந்துக்கு எதிரான தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி கலக்கி வருகிறார். இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நியுசிலாந்து தொடரில் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்து. இரண்டு போட்டிகளில் நியுசிலாந்து வீரர்கள் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். ஆனால் நடு ஓவர்களில் நமது பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அவர்களைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக நடிவரிசையில் அஸ்வின் துல்லியமாக பந்துவீசுகிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் திரும்பினாலும் அவர் திறமையில் குறைவு இல்லை எனக் கூறியுள்ளார்.