Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்சியை தொடர்ந்து பீலே சாதனையை முறியடித்த ரொனால்டோ!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:23 IST)
சமீபத்தில் க்ளப் ஆட்டங்களின் கோல் சாதனையில் பீலேவை மெஸ்சி முறியடித்த நிலையில் தற்போது ரொனால்டோவும் பீலேவின் மற்றுமொரு சாதனையை முறியடித்துள்ளார்.

உலக அளவில் கால்பந்து ரசிகர்களிடையே பிரபலமானவர்களாகவும், சமகால கால்பந்து ஜாம்பவான்களாகவும் விளங்குபவர்கள் லியோனல் மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதில் ரொனால்டோ தற்போது ஹுவாந்தஸ் அணி சார்பாக லா லிகா, சிரி ஏ கோப்பை ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் யுடினீஸ் அணியுடன் நடந்த போட்டியில் ரொனால்டோ அடித்த கோலின் மூலமாக அவரது மொத்த கோல் கணக்கு 758 ஆக உயர்ந்துள்ளது. போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான ரொனால்டோ தேசிய போட்டிகளில் 102 கோல்களும், க்ளப் ஆட்டங்களில் பல்வேறு அணிகளுக்காக 656 கோல்களும் அடித்துள்ளார்.

தற்போது 758 கோல்கள் அடித்துள்ளதன் வாயிலாக உலகிலேயே அதிகமான கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார் ரொனால்டோ. பீலே தேசிய மற்றும் க்ளப் ஆட்டங்கள் சேர்த்து மொத்தமாக 757 கோல்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments