ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்கள் கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடக்க வேண்டி இருந்த டோக்கியா ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்கள் கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டோக்கியோவில் விளையாட்டுகள் துவங்கும் போது பாடுதல், ஆடுதல், முழக்கமிடுதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தூக்கம் மற்றும் உணவு அருந்தும் நேரத்தை தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.