இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் காபி குடித்து மகிழ்கிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் கேலி செய்யும் விதத்தில் விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து செல்வதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, இங்கிலாந்து சென்றதும் அங்குள்ள வீதிகளில் ஜாலியாக காபி அருந்தி மகிழ்வேன் என்று கூறினார். அதை தற்போது முன்னாள் இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் கேலி செய்யும் விதத்தில் விமர்சித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சந்தீப் ப்ட்டீல் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆனால் கோஹ்லியும், ரவி சாஸ்திரியும் சேர்ந்து வீரர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி 4 நாட்கள் நடக்க இருந்த போட்டியை மூன்று நாட்களோடு முடித்து கொண்டனர்.
கங்குலி, தெண்டுல்கர், கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் தங்களை கவலையை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அறிவுரையை இந்திய வீரர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டது போல் தெரியவில்லை.
ஏற்கனவே 70% போட்டி முடிவடைந்துவிட்ட நிலையில் இந்திய வீரர்கள் இன்னும் காபி குடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.