ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மோசமான பார்ம் காரணமாக தடுமாறி வருகிறார்.
ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபகாலமாக மோசமான ஆட்டத்திறனால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் காயத்திலிருந்தும் மீண்டும் பயிற்சி எடுத்து வருகிறார். இதையடுத்து டி 20 உலகக்கோப்பையில் அவர் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார்.
மேலும் நடந்த இரு பயிற்சி போட்டிகளிலும் கூட டேவிட் வார்னர் 0 மற்றும் 2 ஆகிய ரன்களையே எடுத்தார். இதனால் அவர் அணியில் இருந்து உட்காரவைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஷேன் வார்ன் இப்போது அவர் ரன்கள் குவிக்காமல் இருக்கலாம். ஆனால் திறமை நிரந்தரமானது. அவர் பல முக்கியமான போட்டிகளில் ரன்களைக் குவித்துள்ளார். அதனால் அவரை டி 20 உலகக்கோப்பையில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்கக் கூடாது. எனக் கூறியுள்ளார்.