Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஸ்மிருதி மந்தனா படைத்த புதிய சாதனை!

ஸ்மிருதி மந்தனா படைத்த புதிய சாதனை!
, செவ்வாய், 22 மார்ச் 2022 (14:03 IST)
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவுக்கு அரையிறுதியில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. 

 
இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 230 என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிய நிலையில் இந்திய வீராங்கனைகளின் அபாரமான பந்து வீச்சு காரணமாக 43 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
 
இதனையடுத்து இந்திய மகளிர் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அடுத்து இந்தியா 6 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு சென்று உள்ளதால் அரையிறுதிப் போட்டியில் பங்கு பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த போட்டியில் தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவர் 17வது ரன் எடுத்த போது சர்வதேச போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 3-வது இந்திய வீராங்கணை என்ற சாதனையை படைத்தார். 
 
5000 ரன்களை கடந்த முதல் முதல் இந்திய வீராங்காணை என்ற சாதனையை இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் படைத்தார். அடுத்தபடியாக இந்தியாவின் ஆல் ரவுண்டர் ஹர்மன்பிரீத் சிங் 5000 ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கணை என்ற சாதனையை படைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி: அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு!