Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ தலைவரானார் கங்குலி!! தாதாவின் புதிய அவதாரம்

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (15:38 IST)
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 
 
பிசிசிஐயின் தலைவர் பதவி மற்றும் மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் முடிகிறது. 
 
இந்நிலையில் சவுரவ் கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி, பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். 
வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்ற போதிலும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலியை எதிர்த்து இன்னும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யததால் கங்குலில் ஒருமனதாக பிசிசிஐ தலைவராக் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்பட்டது. 
 
அதற்கேற்ப ஐபிஎல் சேர்மென், முன்னாள் பிசிசிஐ நிர்வாகி ராஜீவ் சுக்லா இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என அறிவித்துள்ளார். இது கங்குலில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜே ஷா புதிய செயலாளராகவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் இருப்பார்கள். அருண் துமால் பிசிசிஐ முன்னாள் தலைவருமான அனுராக் தாக்கூரின் சகோதரர் ஆவார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments