Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொதப்பிய தென் ஆப்பிரிக்கா; இந்தியாவுக்கு எளிய இலக்கு

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (20:11 IST)
கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 
தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இன்று 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.
 
டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அரம்பத்திலே தடுமாறியது. ஷர்துல் தாகூர் புவனேஷ்வர் குமாருக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி புவனேஷ்வர் குமார் இடத்தை நிரப்பினார்.
 
46.5 ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments