Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது – 10 இலங்கை வீரர்கள் விலகல் !

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (16:15 IST)
பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் தொடர் விளையாட முடியாது என 10 இலங்கை வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் மேல் தாக்குதல் நடைபெற்றது. இதில் 7 பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகினர். வீரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அதன் பின் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட எந்த நாடும் முன் வரவில்லை.

இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒத்துக்கொண்டு அதற்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என அறிவித்து 10 இலங்கை வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சாரங்கா லக்மால், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணா ரத்னே ஆகிய 10 வீரர்கள் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இதனால் தொடர் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments