Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணீர் மல்க, தோல்வியும் கையுமாய் விடை கொடுத்த பெடரர்!

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (08:09 IST)
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து கண்ணீர் மல்க விடைப்பெற்றார் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர்.


உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் வீரர்களில் நம்பர் 1 வீரராக அறியப்படுபவர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர். இதுவரை 20 க்ராண்ட்ஸ்லாம், 8 விம்பிள்டன் உள்பட பல கோப்பைகளை வென்றுள்ள ரோஜர் பெடரர், 310 வாரங்கள் தொடர்ந்து தரவரிசையில் நம்பர் 1 இடமும் பெற்றவர் ஆவார்.

க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பிரபலமான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச ஆகிய 4 இடங்களில் வென்ற 7 ஆண் வீரர்களில் ஒருவர் ரோஜர் பெடரர். இவர் 2022 லெவர் கோப்பைக்கு பிறகு தான் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது.

இந்நிலையில் லண்டனில் நேற்று தொடங்கிய லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி ஆட்டத்தை பெடரர் எதிர்கொண்டார். ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ - ஜாக் சாக் இணையுடன் மோதினார். இந்த போட்டியில் ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ - ஜாக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவியது.

போட்டி முடிந்ததும் கண்ணீர் மல்க, இது ஒரு அற்புதமான நாள், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருத்தமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது, கடைசியாக எல்லாவற்றையும் செய்து மகிழ்ந்தேன் என்று கூறி விடைப்பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments