Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோனிக்கு டி20 போட்டியில் விளையாட தகுதியில்லை; வி.வி.எஸ்.லட்சுமண்

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (16:39 IST)
ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடும் டோனி டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவதில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வி.வி.எஸ் லட்சுமண் மற்றும் அகர்கர்  கூறியுள்ளார்.


 

 
நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு டோனியின் சராசரியான ஆட்டமே காரணம் என வி.வி.எஸ்.லட்சுமண் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் கூறியுள்ளனர்.
 
மேலும் இதுகுறித்து லட்சுமண் கூறியதாவது:-
 
டோனி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடுகிறார். அதில் அவரது பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆனால் டி20 போட்டிகளில் அவரின் ஆட்டம் சிறப்பானதாக இல்லை. எனவே, டோனி இளைஞர்களுக்கு வாய்ப்பை விட்டு கொடுக்கலாம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணி சிறப்பாக இருக்கும் என்றார்.
 
முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர், டோனி கோலியுடன் இணைந்து ரன் குவித்திருந்தால் இந்தியா வெற்றிப்பெற்றிருக்கும் என்றார். இவரும் டோனி டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி விரும்பும்வரை சி எஸ் கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும்… காசி விஸ்வநாதன் பேட்டி!

கம்பீருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆப்பு… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசி வாய்ப்பு – பிசிசிஐ ஆலோசனை!

என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. ஐபிஎல் எண்ட்ரி குறித்து ஆண்டர்சன் பதில்!

விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து முடிவை மாற்றிக்கொண்ட ரோஹித் ஷர்மா!

அடுத்தடுத்து இரண்டு சதம்… இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்திய சஞ்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments