Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவின் தொடர் தோல்வியை காப்பாற்றுகிறதா மழை?

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (19:56 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது. இன்றைய போட்டியில் அந்த அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதுகிறது.
 
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 6 ரன்களிலும் அதனையடுத்து மார்க்கம் 5 ரன்களிலும் அவுட் ஆனதால் 7.3 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
 
இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்ட போட்டி தற்போது மதியம் 3.30 ஆகியும் இன்னும் போட்டி தொடங்கவில்லை. தொடங்குவதற்கான அறிகுறியும் தெரியவில்லை என்றும் வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
ஒருவேளை மழை நின்று, விளையாடுவதற்கு ஏதுவாக மைதானம் இருப்பதாக நடுவர்கள் முடிவு செய்தால் ஓவர் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்படும். இல்லையேல் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டி ரத்தானால் தென்னாபிரிக்கா தனது முதல் புள்ளியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதே தொடரில் இலங்கை-பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments