Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (23:31 IST)
இந்தாண்டு முதல் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகிறது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள மகளிர் ஐபிஎல் போட்டியில், இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் மோதின.

டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.   எனவே மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணி சார்பில், கார்ட்னர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத்அணி களமிறங்கியது. இதில், 20 ஓவர்கள் முடிவில், 107 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இந்த அணியின் ஹர்லின் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்திருந்தார்.மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

எனவே மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments