ஃபிஃபா -22வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், செர்பியாவும் கேமரூனும் மோதிய நிலையில், ஆட்டம் சமனில் முடிந்தது.
ஃபிஃபா -22வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் பிரமாண்டமாக நடந்து வருகிறது.
இத்தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடந்துவரும் இப்போட்டியில், கேமரூனும், செர்பியாவும் மோதின.
இப்போட்டியில், 29 வது நிமிடத்தில் முதலில் கேமரூன் அணி கோல் போட்டது. முதல் பாதி முடிவில் கேமரூன் 2 கோல்களும், செர்பியா 1 கோலும் அடித்திருந்தது.
இரண்டாவது பாதியில், கேமரூன் 1 கோல் அடிக்க, செர்பியாவும்,2 கோல்கள் அடித்தது. எனவே, இரு அணிகளும் கோல்களில் சமன் செய்தன.
இன்றைய பரபரப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
Edited by Sinoj