இந்தியாவில் ஆண்களுக்கான ஐபிஎல் தொடரை போலவே தொடங்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசனுக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.நான்காவது சீசனின் முதல் போட்டி, ஜனவரி 9ஆம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த பரபரப்பான தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2024 ஆம் ஆண்டின் வெற்றியாளரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இரு பலம் வாய்ந்த அணிகளின் மோதலுடன் தொடர் தொடங்குவது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
இந்த போட்டிகள் இரண்டு முக்கிய நகரங்களில் நடத்தப்பட உள்ளன. தொடரின் முதல் 11 போட்டிகள் மும்பையிலும், அதனை தொடர்ந்து மீதமுள்ள 11 போட்டிகள் வதோதராவிலும் நடைபெற இருக்கின்றன. இந்த அட்டவணை வெளியீட்டின் மூலம் மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
https://x.com/wplt20/status/1994650191505625558
Edited by Mahendran