டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு தனக்கு விதிக்கப்பட்ட ஆடை தடைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அவரின் இந்த வெற்றியைவிட அவரது ஆடை குறித்த பேச்சுதான் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓப்பனில் செரினா பங்கேற்ற போது, கேட் உடை என்ற முழுவதும் கறுப்பு நிறத்திலான மிகவும் டைட்டான உடை அணிந்து போட்டியில் பங்கேற்றார்.
இதையடுத்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கூட்டமைப்பு, போட்டியை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக தெரிவித்து, செரினாவின் கேட் ஆடைக்கு தடை விதித்தது.
இதனால் இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் தொடரில் கடந்த ஆண்டு அவரது உடைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உடை அணிந்து வந்திருந்தார் செரினா.
நேவி மற்றும் வெள்ளை நிறம் கலந்த டூ பீஸ் அவுட் ஃபிட் அணிந்து பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்றார் செரினா. அவர் அணிந்திருந்த ஜாக்கெட் மீது சாம்பியன், ராணி, பெண் கடவுள் என்ற வாசகம் பிரெஞ்சு மொழியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.