தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் 200 கிராம்
ஏலக்காய் - 6
முந்திரி உடைத்தது - 50 கிராம்
செய்முறை:
முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பாசிப் பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும்.
அரைத்த மாவை சலித்து கொள்ளவும். மிக்சியில் சர்க்கரையை போட்டு பொடித்து கொள்ளவும். ஒரு தட்டில் அரைத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் துள், வறுத்த முந்திரி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடானவுடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடித்து ஆற விடவும். அவ்வளவுதான் சுவையான லட்டு தயார்.