இயக்குனர் மணிவண்ணனின் மரணம் திரையுலகிலும், தமிழார்வலர்கள் மத்தியிலும், பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உடல்நிலை சரியில்லை என தெரியும், ஆனால் இவ்வளவு சீக்கிரம் இப்படியொரு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை என மணிவண்ணனின் நெருங்கிய நண்பருமான பிரமிட் நடராஜன் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
மணிவண்ணனின் உடலுக்கு இயக்குனர்கள் மனோபாலா, சேரன், பாலா, அமீர், பாக்யராஜ;, தங்கர்பச்சான் உள்பட ஏராளமான இயக்குனர்களும் சரண்யா, கோவை சரளா, வடிவுக்கரசி, விஜய், செந்தில், சாந்தனு உள்ளிட்ட நடிகை, நடிகர்களும் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இளையராஜா மணிவண்ணனின் வீட்டிற்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மணிவண்ணனின் குருநாதர் பாரதிராஜாவும் நேற்று மணிவண்ணனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மாலையில் மணிவண்ணனின் உடல் புலிக்கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக போரூருக்கு எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.