Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (19:31 IST)
ஆமிர் கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

 
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸான ஹிந்திப் படம் ‘3 இடியட்ஸ்’. ஆமிர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரினா கபூர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். பாலிவுட்டில் மட்டுமின்றி, திரையிட்ட எல்லா இடங்களிலும் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
 
இந்தப் படத்தைத்தான் தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஷங்கர். விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், இலியானா, சத்யன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். தமிழிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
 
இந்நிலையில், ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதாகத் தெரிவித்துள்ளார் ராஜ்குமார் ஹிரானி. கதையாசிரியர் அபிஜித்துடன் சேர்ந்து இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதத் தொடங்கிவிட்டாராம் அவர். தற்போது சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறான ‘சஞ்சு’ படத்தின் ரிலீஸில் பிஸியாக இருக்கும் ராஜ்குமார் ஹிரானி, அதனைத் தொடர்ந்து ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ (வசூல்ராஜா எம்பிபிஎஸ்) படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போகிறார்.
 
அதன்பிறகு தான் ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார் ராஜ்குமார் ஹிரானி. ‘3 இடியட்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ஆமிர் கான் ஏற்கெனவே கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments