அண்மையில் நடிகர் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி-2 படத்தில் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அபோது நிரூபர்கள், மீ டூ’வில் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பெண்கள் பாலியல் புகார்கள் குறித்து பதிவிடுவது பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த விஷால்.
சண்டக்கோழி-2 படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் மீது படக்குழுவில் உள்ள ஆண்கள் கண்ணியத்தோடு நடந்து கொண்டனர். பாலியல் தொல்லைகளை நடிகைகள் தாமதிக்காமல் உடனடியாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் நிச்சயமாக விரைந்து நடவடிக்கை எடுப்போம்.
நடிகை அமலாபால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானபோது , அதை எங்களிடம் தெரிவித்தார். அப்போது நானும் கார்த்தியும் உடனடியாக மலேசியாவுக்கு தொடர்பு கொண்டு பேசி, பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்தோம். இதுபோல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் உடனே எங்களிடம் சொன்னால் நிச்சயம் விரைந்து நடவடிக்கை எடுப்போம்.
மேலும், படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால் நான் எப்போதும் ‘மீ டூ’ வுக்கு ஆதரவாக இருப்பேன். பெண்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன். அவர்களின் முன்னேற்றத்தை பார்த்தும் சந்தோஷப்படுவேன். தமிழ் திரையுலகில் பாலியல் கொடுமை பற்றிய ‘மீ டு’ விவகாரம் குறித்து விசாரிக்கவும் நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்தார்.