Webdunia - Bharat's app for daily news and videos

Install App

96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (07:55 IST)
96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?
தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டாம் பாகம் எடுக்கும் சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ரஜினி, கமல் படங்கள் உள்பட பல திரைப்படங்கள் இரண்டாம் பாகங்களாக வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’96’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய ’96’ திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது 
 
இந்த படத்தின் கிளைமாக்சில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா பிரிந்து விடுவது போல் எடுக்கப்பட்டிருக்கும் இதனை அடுத்து மீண்டும் இருவரும் எதிர்பாராத வகையில் சந்திப்பது போன்றும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை விவரிக்கும் வகையில் இரண்டாம் பாகம் உருவாக்க இயக்குனர் பிரேம் குமார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
 
விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவரும் மீண்டும் இரண்டாம் பாகத்திலும் மீண்டும் நடிப்பார்கள் என்றும் மேலும் ஒரு முக்கிய நடிகை இந்த படத்தில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவதால் விஜய்சேதுபதி த்ரிஷா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments