இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படம் தெலுங்கு மொழியில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற இப்போது நெல்சன் இயக்குகிறார். இந்நிலையில் முருகதாஸ் ஒரு அனிமேஷன் படத்துக்கான கதையை எழுதி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை அவர் இயக்கமாட்டார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் முருகதாஸின் அடுத்த படம் தமிழில் இருக்காதாம். தெலுங்கில் ஒரு முன்னணி நடிகர் நடிக்கும் படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். தர்பார் தோல்விக்குப் பின் முருகதாஸுக்கு இங்கே டிமாண்ட் இல்லை என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.