Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துருவ் விக்ரம் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்?

துருவ் விக்ரம் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்?
, வெள்ளி, 7 ஜூலை 2023 (12:53 IST)
கவின் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் அவர் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்கும் படத்துக்குப் பிறகு இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் ரஹ்மான் இளம் நடிகர் மற்றும் இளம் இயக்குனர் படத்துக்கு இசையமைப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக் கானின் ஜவான் படத்தை தமிழகத்தில் வெளியிடும் பிரபல நிறுவனம்!