Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வசூல்ராஜா எம்பிபிஎஸ் அடுத்த பாகத்தில் ஆரவ்?

வசூல்ராஜா எம்பிபிஎஸ் அடுத்த பாகத்தில் ஆரவ்?
, வெள்ளி, 4 ஜனவரி 2019 (08:11 IST)
கமல்ஹாசன், சினேகா நடித்த 'வசூல்ராஜா' எம்பிபிஎஸ் என்ற படத்தை இயக்கிய சரண், தற்போது ''மார்க்கெட்ராஜா எம்பிபிஎஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இரண்டு படங்களின் டைட்டில் ஒரே மாதிரி இருப்பதால் இந்த படம் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் இதனை இயக்குனர் சரண் மறுத்துள்ளார். இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை என்றும், இந்த படத்திற்கும் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் நாயகனாக பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிக்கவிருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை காவ்யா நடிக்கவிருப்பதாக தெரிவித்த சரண், மேலும் இந்த படத்தில் 'பாகுபலி புகழ் பிரபாகர், ராதிகா, நாசர், சாயாஜி ஷிண்டே, யோகிபாபு, சாம்ஸ் என பலர் நடிக்கவிருப்பதாகவும் கூறினார்.

webdunia
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஆரவ் ஒரு லோக்கல் டான் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். சரண் இயக்கிய 'ஆயிரத்தில் இருவர்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு அடிக்கும் ஒரு பஞ்ச் இருக்கு: 'விஸ்வாசம்' படம் குறித்த புதிய தகவல்