Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக் & சல்மானுடன் சேர்ந்து படம் நடிக்க பேசியிருக்கிறேன்… இது சரியான நேரம்- அமீர்கான் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

vinoth
சனி, 16 மார்ச் 2024 (07:30 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் கடைசி படமாக லால் சிங் சத்தா கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திரைப்படம்  படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து அவர் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதனால் 2023 ஆம் ஆண்டு அவர் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை அமீர்கான் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாள் அன்று (மார்ச் 14) அவர் ரசிகர்களோடு நேரடியாக சமூகவலைதளம் மூலமாக உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ஷாருக் மற்றும் சல்மான் கானோடு சேர்ந்து நடிப்பீர்களா எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமீர்கான் “மூன்று பேரும் இணைந்து நடிப்பது பற்றி முன்பே பேசினோம். எப்போதும் அவர்களோடு இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்கான கதை அமையவேண்டும். இதுதான் அதற்கு சரியான நேரம் என்று நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார். இதனால் விரைவில் அவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை எதிர்பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

மீண்டும் இணைகிறதா சிறுத்தை சிவா & கார்த்தி கூட்டணி?

அடுத்த கட்டுரையில்
Show comments