Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்… பிரபல கராத்தே மாஸ்டர் ஹுசைனி அறிவிப்பு!

Advertiesment
Karate husseini

vinoth

, புதன், 12 மார்ச் 2025 (08:01 IST)
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ஷிகான் ஹுசைனி. பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு நடிகராக அறியப்பட்ட போதும் இவரது தொழில் கராத்தே சொல்லிக்கொடுப்பதுதான்.

தொலைக்காட்சிகளில் பெண்கள் தற்காப்பு குறித்து இவர் தொடர்ந்து நடித்துக் காட்டிய பயிற்சி வீடியோக்கள் வெகு பிரபலம். இந்நிலையில் ஹுசைனி தற்போது ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். அது தான் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான்.

இது சமம்ந்தமாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் “நான் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு தினமும் 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப் படுகிறது. அதனால் நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன்.  நான் கராத்தே சொல்லிக் கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று இருக்கிறேன். அங்குதான் நடிகர் பவண் கல்யாண் வந்து கராத்தேக் கற்றுக்கொண்டார். அந்த இடத்தை அவர் வாங்கிக் கொள்ள வேண்டும். அதே போல விஜய்க்கு ஒரு கோரிக்கை. அவர் தமிழ்நாடு முழுவதும் குடும்பத்துக்கு ஒரு வில்வித்தை வீரர் மற்றும் வீராங்கனையை உருவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!