Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த ஜெயராம்… அறிவித்த படக்குழு!

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த ஜெயராம்… அறிவித்த படக்குழு!
, திங்கள், 20 மார்ச் 2023 (08:01 IST)
மகேஷ் பாபு நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸான சர்காரு வாரிபாட்டா திரைப்படம் கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவரின் அடுத்த படம் பற்றிய கேள்விகள் எழுந்தன. ராஜமௌலி இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்கான வேலைகளை ராஜமௌலி தொடங்கிவிட்டார். ஆனால் ஷூட்டிங் தொடங்க எப்படியும் ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்பதால் இப்போது மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படமாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் அமலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இது மகேஷ் பாபுவின் 28 ஆவது படம். இந்நிலையில் இப்போது இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள நடிகரான ஜெயராம் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அலா வைகுந்தபுரம்லூ திரைப்படத்துக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக ஜெயராம் மாறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில்லுனு ஒரு காதல்னு ஒரு கத பண்ணவேண்டியது… மேடையில் சிம்பு பகிர்ந்த தகவல்!