Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 67 படத்தில் நான் நடிக்கவில்லை… பிரபல நடிகர் பகிர்ந்த புகைப்படம்!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (09:36 IST)
நடிகர் கலையரசன் இயக்குனர் லோகேஷ் உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்துக்கான செட் ஒன்று இப்போது சென்னையை அடுத்த பையனூரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. செட் பணிகள் நடப்பதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில் நடிகர் கலையரசன் தற்போது இயக்குனர் லோகேஷுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “ நீண்ட நாளுக்குப் பிறகு நண்பர் லோகேஷுடன் சந்திப்பு. வழக்கம் போல நான் தளபதி 67 படத்தில் இல்லை. ஆனால் லோகேஷ் யூனிவர்சில் இருப்பேன் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments