Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாகார்ஜுனாவின் 100 ஆவது படத்தை இயக்கும் மோகன் ராஜா.. அப்ப தனி ஒருவன்?

நாகார்ஜுனாவின் 100 ஆவது படத்தை இயக்கும் மோகன் ராஜா.. அப்ப தனி ஒருவன்?
, திங்கள், 17 ஏப்ரல் 2023 (15:55 IST)
'ஜெயம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராஜா தொடர்ச்சியாக ரீமேக் படங்களையே இயக்கி, ரீமேக் ராஜா என்ற பெயரை பெற்றார். ஆனால் அந்த கேலிகளை உடைத்து முன்னணி இயக்குனராக அவர் தன்னை மாற்றிக்கொண்டது தனி ஒருவன் படத்தின் மூலம்தான். ஜெயம்ரவியின் சினிமா வாழ்க்கையிலும் அந்தப் படம் முக்கியமானதொரு படமாக அமைந்தது.

இந்நிலையில் வேலைக்காரன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். அங்கு சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் படத்தை இயக்கினார். அதையடுத்து இப்போது நாகார்ஜுனாவின் 100 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை முடித்த பின்னர் ராஜா, தனி ஒருவன் 2 படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரிஷா மற்றும் ஜெயம் ரவியின் ட்விட்டர் ப்ளூ டிக் காலி!... என்ன காரணம்?