Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சைக்கோ லவ்வர் நகுலுக்கு பிறந்தநாள் - குவியும் வாழ்த்துக்கள்!

Advertiesment
Actor Nakkhul
, செவ்வாய், 15 ஜூன் 2021 (11:41 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.

Actor Nakkhul
இதில் இன்றளவும் அவரது அடையாளமான படமாக பார்க்கப்படுவது காதலில் விழுந்தேன் படம் தான். அந்த படத்தில் காதலி இறந்த பின்னரும் கண்மூடி தனமாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து சைக்கோ லவ்வராக புகழ் பெற்றார். மேலும் கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு எண்  ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  

Actor Nakkhul
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து சமீபத்தில் நடிகர் நகுலுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் சிறந்த பாடகராக நிறைய படங்களுக்கு பின்னணி பாடகராக பாடியுள்ளார், கூடவே கிட்டார் வாசித்து நிறைய வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார். 

Actor Nakkhul
மேலும்,  உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் 200% முழு கவனத்தை செலுத்துவார். இப்படி பல திறமைகளை கையில் கொண்டு துறுதுறு இளம் நடிகராக மகிழ்ச்சியாக இருக்கும் நகுல் இன்று 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் கலாய்ன்னா நியாபகம் வருபவர் அவர்தான்! – மணிவண்ணன் நினைவு தினம்!