Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 200 கோடி சம்பளத்தை தவிர்த்து மக்களுக்காக வருகிறார் விஜய் - நடிகர் சவுந்தரராஜா!

J.Durai
திங்கள், 24 ஜூன் 2024 (10:41 IST)
நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 
 
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார். 
 
அப்போது பேசிய அவர்:
 
விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டர்களாக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெயின், ஃபிளைட் பிளைட்னு 2026-க்கு வந்துட்டே இருக்காங்க. நான் மிகைப்படுத்தி பேசல, இந்த உற்சாகம்தான் பலருக்கு பயத்தை உண்டாக்கும். அந்த உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும். 
 
ஒரு விஷயம் நண்பா. நாம சின்ன விஷயம் பண்ணாலும், அதை ஃபோக்கஸ் பண்ண கேமரா இருக்கு. நாம வளரக்கூடாதுனு பண்ணுவாங்க. இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும், பலபேரை சிந்திக்க வைக்கும். நம்ம அண்ணன் தளபதிக்கு பலமா நிற்கும். 
 
நம்ம அண்ணன் தளபதி விஜய், இன்னைக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒருத்தர், சினிமா வேண்டாம்னு, நான் சம்பாதிச்ச பணம், வெற்றி, புகழ், வாழும் வாழ்க்கைக்கு இந்த மக்கள் தான் காரணம். 
 
அந்த மக்கள், இந்த மண்ணிற்காக வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வர பேராசை தான் காரணம். அந்த பேராசை, ஒவ்வொருத்தர் குடும்ப ரேஷன் கார்டில் உறுப்பினர் ஆவதுதான் அந்த ஆசை. 
 
விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா, அவருக்கு பேசவே தெரியாதுனு நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க. நான் அவங்களுக்கு பதில் கொடுக்கவே இல்லை. இப்போ சொல்றேன், மௌனத்திற்கு இருக்கும் சக்தி மிகவும் பெரியது. விஜய் மிகவும் சைலண்ட் ஆன நபர். அந்த சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு. அந்த வைலன்ஸ்-க்கு எதிராக மட்டும் தான் வெளியே வரும். 
 
விஜய் மிகப்பெரிய பேச்சாளர், விரைவில் அதை பார்ப்பீங்க. பேச்சாளர் பக்கம்பக்கமா பேசனும்னு அவசியம் இல்லை. 
 
ஒரு வார்த்தை பேசினா போதும். தமிழக அரசியலை படிங்க. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஏன் ரூ. 10 லட்சம் கொடுக்கணும். நீங்கள் ரசிகரா இல்லாமல் தொண்டரா மாறுங்க. அரசியல் படிச்சு கேள்வி கேட்கணும். நீங்க கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கணும். 
 
நாம வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு நல்லது செய்வோம். விஜய் அண்ணா வழியில் மக்களுக்கும், மண்ணுக்கும் நல்லது செய்வோம், என்று தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சவுந்தரராஜா, "தளபதி விஜய் அண்ணா, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் 50-வது பிறந்தநாள், பொன்விழாவை விமர்சையாக கொண்டாடி வருகிறோம். சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் மாவட்ட தலைவர் அண்ணன் பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல் மற்றும் ஆவடி என நான்கு தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்த தொகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என பலருக்கு கணினி, டி ஷர்ட், ஊனமுற்றோருக்கான மிதிவண்டி மற்றும் அரிசி, சேலை, இஸ்திரி பெட்டி என ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.
 
இந்த இடத்தில் ஒரு கருவியாக நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." 
 
"ஸ்டிக்கர் அரசியலை தாண்டி, யார் செய்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கு. நாம் யார் என்பதை சத்தம் போட்டு கூற வேண்டிய அவசியம் இருக்கு. எல்லாத்துக்கும் விளம்பரம் வேண்டும். அரசியல் சார்ந்த நல்ல விஷயங்கள் மற்றும் கொள்கைகளுக்கு விளம்பரம் அவசியம். மௌனம் மிகப்பெரிய சத்தம். விஜய் எல்லாவற்றையும் அணுஅணுவாக ஆராய்ந்து, தனக்குள் அதிகம் விவாதம் செய்து ஒரு வார்த்தை பேசுவார். அது சரியாக இருக்கும் என்று நேரடியாக பார்த்திருக்கிறேன். அவர் பேச்சாளர் என்பதை விரைவில் பார்ப்பீர்கள்." 
 
"கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களும் மனிதர்கள் தான். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதாக ஆட்சிக்கு வரும் எல்லா கட்சிகளும் சொல்கின்றன. ஆனால் மதுவிலக்கை கொண்டுவருவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை விட்டுவிட முடியாது. நடிகர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதில் மனிதாபிமானம் மட்டும்தான் உள்ளது."
 
"விஜய்யின் மௌனத்தில் ஆயிரம் வார்த்தைகள் அடங்கி இருக்கு. 
 
நேரம் வரும் போது சரியாக பேசுவார்கள். ஒரு தம்பியாக அவருடன் பழகிய எனக்கும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களுக்கும் நம்பிக்கை இருக்கு. அதை நீங்கள் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கங்குவா திரைப்படத்திற்கு தடை.. ரிலையன்ஸ் நிறுவனம் தொடுத்த வழக்கில் முக்கிய உத்தரவு..!

கிளாமர் தூக்கலான உடையில் ஹாட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

கிளாமர் உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படத் தொகுப்பு!

கையில் சுருட்டு… உக்கிரமான பார்வை… அனுஷ்கா நடிக்கும் ‘காதி’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

விஜய் 69 படத்தின் தமிழக விநியோக உரிமைக்காக மிகப்பெரிய தொகைக் கொடுக்க தயாரான லலித்!

அடுத்த கட்டுரையில்