Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகிய அஜித் பட நடிகை! இதென்ன புது ட்ரெண்ட் ஆகிடுச்சு!

Advertiesment
Actress Bruna Abdullah
, திங்கள், 13 மே 2019 (16:30 IST)
அண்மைக்காலமாக பிரபல நடிகைகள் சிலர் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகி வருகின்றனர்.


 
சமீபத்தில் கூட நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான செய்தி பரவலாக பேசப்பட்டு  சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. ஆனால் இதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்  காதலருடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் எமி. 
 
அந்தவகையில் தற்போது மற்றொரு பாலிவுட் நடிகை திருமணத்துக்கு முன் கர்ப்பமாகியிருக்கிறார்.  தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் ‘பில்லா 2’ படத்தில் நடத்த நடிகை புருனா அப்துல்லா. பிரேசில் நாட்டை சேர்ந்த இவர் ஒரு சுற்றுலா பயணியாக இந்திய வந்தார் அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. பின்  ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், கிரான்ட்மஸ்தி, ஜெய் ஹோ, உடன்சோ போன்ற ஹிந்தி படங்களில் அடுத்தடுத்து நடித்து நடிகையாக மாறிவிட்டார். 

Actress Bruna Abdullah

 
புருனாவிற்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் நெருங்கி வருவதற்குள் புருனா கர்ப்பமாகிவிட்டார். இதனை புகைப்படத்துடன்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இன்னும் 5 மாதங்களில் குழந்தை பிறக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். 

Actress Bruna Abdullah

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீலிக்கண்ணீர் வடித்து மக்களை திசை திருப்புகிறீர்! கமலை விளாசிய காயத்ரி!