நடிகை கஸ்தூரி கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
முன்னாள் நடிகையான கஸ்தூரி அரசியல் சார்ந்த விஷயங்களில் தனது குரலை அவ்வப்போது பதிவு செய்து வருபவர். அனைத்து அரசியல் கட்சிகளையும் சமீபலாலமாக விமர்சனம் செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.
இந்நிலையில் அவர் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். புதிய தொடக்கம் , இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம். என் நலம் விரும்பிகளுக்கு நன்றி. #mrPREGNANT எனக் கூறியுள்ளார். இந்த பதிவை அடுத்து அவர் உண்மையிலேயே கர்ப்பமாக இருக்கிறாரா அல்லது ஏதேனும் படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.