Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எது ஆபாசம் ! கொதித்த ஓவியா, சரமாரி கேள்வி...

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (10:27 IST)
நடிகை ஓவியா '90 எம்.எல்.’ படத்தில் அரைகுறை உடை அணிந்து, இரட்டை அர்த்த வசனம் பேசி, ஆபாச காட்சியில் நடித்துள்ளார். இந்த படம் மார்ச் 1ம் தேதி (நாளை மறுநாள்) உலகம் முழுவதும் வெளியாகிறது.


 
இந்த படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் ஏன் நடித்தீர்கள் என்று செய்தியாளர்கள் நேற்று ஓவியாவிடம் கேள்வி எழுப்பினார்கள்.
 
அதற்கு பதிலளித்துப் பேசிய ஓவியா, எது ஆபாசம் என்று சொல்கிறீர்கள், பெண்கள் என்றாலே கண்ணை கசக்கிக்கொண்டு நடிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கா, நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. கற்பழிக்கும் காட்சியில் நடிக்கவில்லை. ரசிகர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதை கொடுப்பது என் கடமை. உடை அணிவது பெண்களின் சுதந்திரம். அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இது, ஆணாதிக்கத்துக்கு எதிரான படம். கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ப நடிப்பதில் தப்பு இல்லை. படத்தில் நான் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை. காதலில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கல்யாணத்தில், ‘அது’ இல்லை என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்