கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரம்யா சிம்புவின் குத்து படத்தில் நடித்ததின் மூலம் குத்து ரம்யா என்று அழைப்படுமளவிற்கு பிரபலமடைந்தார். தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த ரம்யா அரசியலிலும் காங்கிரஸில் சேர்ந்து பார்லிமெண்ட் உறுப்பினரானார்.
இவரது இந்த அரசியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியர் சில நாட்களுக்கு முன்பு மறைந்த கன்னட நடிகர் அம்ரீஷ். ஆனால் இவரது மறைவுக்கு ரம்யா வராததால் ரம்யாவுக்கு பல இடங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அம்ரீஷ் ரசிகர்கள் ஒட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ரம்யா வராததற்கு தற்போது உருக்கமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது, தனக்கு முள்ளந்தண்டு நோய் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவில் தெரிவித்துள்ள ரம்யா கடந்த அக்டோபரில் இருந்து நான் ஆஸ்டியோபிளாஸ்டோமா என்ற விநோத நோயினால் அவதிப்பட்டு வருவதாகவும், பாத எழும்புகளில் கடுமையான வலி உள்ளது. அதை அலட்சியம் படுத்தி நடந்து சென்றால் புற்று நோயாகவும் மாற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அறிவுறித்தியதாக தெரிவித்துள்ளார்.
அதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றேன். இது போன்ற பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகின்றது. இது எனக்கு மிகப்பெரிய பாடம். நான் அலட்சியமாக இருந்ததால் இந்த வகையான நோய்க்கு ஆளாகி இருக்கின்றேன். எனவே நீங்கள் (பெண்கள்) பாதுகாப்பாக இருங்கள். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். என்னைப்போல அலட்சியமாக இருக்காதீர்கள்’’ என்ற தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அதனால் தான் நான் அம்ரீஷ் மறைவுக்கு வர முடியவில்லை. அதற்காக என்னை இறந்துவிட்டதுபோல சித்தரித்து, இதய அஞ்சலி என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் மண்டியாவில் ஊர் முழுவதும் ஓட்டினார்கள் அது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது.
அம்பரீஷுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த அம்பரீஷின் ரசிகர்கள் இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து டிவிட்டர் பதிவையும் ரம்யா வெளியிட்டுள்ளார். அதில், ‘அம்பரீஷ் மறைவு செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரை எனக்கு எப்போதும் பிடிக்கும். எப்போதும் என் மனதில் நீங்கா நினைவுகளாக இருப்பார்’ என்று பதிவிட்டிருந்தார்.