நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அடியே. இப்படத்தை ஏன்டா தலையில எண்ண வைக்கல், திட்டம் ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கி வருகிறார்.
இப்படத்தில், வெங்கட்பிரபு, கவுரி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார்.
சமீபத்தில், இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியான நிலையில், இப்படத்தில் பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தில், கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், ''தமிழ் சினிமாவில் நிறைய இயக்குனர்கள் கதை எழுதும்போது, ஒருவருக்கு பெயர் வைத்து விடுகிறார்கள்…அதற்கு இயக்குனர் மீது வழக்குப் போடுவார்கள்… யாரையும் புண்படுத்த வேண்டுமென்று இவ்வாறு அவர்கள் செய்வதில்லை'' என்று கூறினார்.
மேலும்,'' நான் இப்போது எழுதி வரும் கதையில் ஒரு கேரக்டருக்கு பெயர் வைக்க 15 நிமிடம் ஆனது. அதன்பிறகு யுவராஜ் என்று பெயர் வைத்தேன்…..முதலில் இளையராஜா என்று பெயர் யோசித்தேன்…ஆனால் அது கேஸ் ஆகும். எங்க அப்பா தான் அவரு… இருந்தாலும் கேஸ் போடுவார்.... என்னை எப்படி வேண்டுமானாலும் காட்டுங்கள்…. உண்மையில் நான் மோசமானவன் தான். அதனால் படத்தை இயக்க ஒரு இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும் ''என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான மாவீரன் படத்தில் மிஷ்கின் கொடூரமாக வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.