இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர்களில் ஒருவர் ஆடூர் கோபாலகிருஷ்ணன். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் இப்போதெல்லாம் தேசிய விருதுகள் என்பதே நகைச்சுவை ஆகிவிட்டது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இப்போது ஓடிடிக்காக படங்கள் உருவாக்குவது சினிமாவையே அழித்துவிடும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “சினிமா என்பது இருண்ட திரையரங்கில் அனைவரும் இணைந்து பார்க்கவேண்டிய அனுபவம். அதை எப்படி செல்போன்களிலும் டிவி திரைகளிலும் பார்க்க முடியும். தொலைக்காட்சி என்பதே ஒரு சமரசம்தான். சினிமா உயிர்ப்போடு இருக்கவேண்டும் என்றால் அது சின்னத் திரைகளை நம்பி இருக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.