Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனை அடுத்து சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்த ரஜினி பட இயக்குனர்!

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (13:19 IST)
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆளும்கட்சியான அதிமுக மற்றும் பாஜகவினர் சூர்யாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சீமான், நாஞ்சில் சம்பத், கமல்ஹாசன் உள்பட ஒரு சில அரசியல்வாதிகள் சூர்யாவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய பேச்சுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களையும், ஆதரவாக வந்த கருத்தையும் சூர்யா கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளார்
 
இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து இயக்குநர் பா ரஞ்சித் அவர்களும் சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர், பெண்கள், மாணவர்கள் எதிர்காலம் குறித்தும் சிந்தித்தும், பேசியும் செயல்பட்டும் வரும் சூர்யாவுக்கு நான் துணை நிற்போம் என்று இயக்குநர் பா ரஞ்சித் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments