Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரைட்டர் படத்தை வாங்கிய ஆஹா ஓடிடி!

ரைட்டர் படத்தை வாங்கிய ஆஹா ஓடிடி!
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:17 IST)
பா ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் பிராங்க்ளின் இயக்கிய ரைட்டர் திரைப்படம் பாராட்டுகளைக் குவித்தது.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவான திரைப்படம் ரைட்டர். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஆஹா பெற்றுள்ளது. தமிழில் அவர்கள் கால்பதிக்க உள்ள நிலையில் முதல் திரைப்படமாக ரைட்டரைக் கைப்பற்றியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட்டில் தமிழ்க் கலைஞர்களை களமிறக்கிய அட்லி…!