Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடி கணக்கில் கொள்ளையடித்த ஐஸ்வர்யாவின் காதலர் கைது.! ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு.!

Advertiesment
Aishwarya Dutta
, ஞாயிறு, 17 மார்ச் 2019 (10:07 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா . 
 
ஐஸ்வர்யாவின் காதலர் என்று சொல்லப்படும் கோபி என்பவர் 2016 ல் கோடி கணக்கில் பண மோசடி செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின் பல மாதங்கள் கழித்து வெளியே வந்தார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
 
நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாக பல லட்சம் கடன் ரூபாயைச் சுருட்டியதாகக் கைது செய்யப்பட்டார். இதில் ஐஸ்வர்யாவும்  நளினி என்பவரும்  அந்த கம்பெனிகளில் பங்கு தாரர்கள் என்று பாதிக்க பட்டவர்கள் கூறியிருக்கிறார்கள். 
 
Aishwarya Dutta
கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் இருந்துவிட்டு, வெளியில் வந்திருக்கிற கோபியை பணத்தை இழந்த பலரும் தேடிக்கொண்டிருந்தனர். 
 
இந்நிலையில் கடந்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோபி மீண்டும் கைதாகியுள்ளாராம்.  மேலும் ஐஸ்வர்யா பிக் பாஸ் ஷோவுக்குள் வந்ததிலும் கோபிக்குப் பங்கு இருக்கலாம் எனக்கூறப்படுகிறது அவரை இந்த நிகழ்ச்சிக்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் புகழை வைத்து, வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் பார்க்கத் திட்டமிட்டிருந்ததாக  செல்கின்றனர். அதேபோல அந்த சீசனில் ஐஸ்வர்யா அடம்பிடித்து ஷோவுக்குள் நுழைந்தார் என்பது கூடுதல் தகவல். 
 
Aishwarya Dutta
எனவே, இந்த விசாரணையில் ஐஸ்வர்யாவிற்கும் தொடர்பு இருந்தால் அவரும் கைது செய்யபடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ்ணுவிஷால் - விக்ராந்த் இணையும் அதிரடி ஆக்சன் படம்!