வை ராஜா வை, 3 ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா. சமீபத்தில் இவர் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்தார்.
இதனையடுத்து, இவர் பயணம் என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். மூன்று மொழிகளில் சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்ட இப்பாடல் வைரலானது.
இ ந் நிலையில் ஐஸ்வர்யா தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் , ஓம் சாந்தி சால் என்ற இந்திப் படத்தைத் தான் இயக்கவுள்ளதாகவும், இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.