Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"அஜித் 60 " - இது தல வாழ்க்கையின் அன்டோல்டு ஸ்டோரி?

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (15:52 IST)
தமிழ் சினிமாவின் தலையாய  நடிகர் அஜித் எச். வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்து ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். 


 
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
நேற்று நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த போனி கபூர், அஜித் 60 படத்தை பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இப்படத்தையும் எச். வினோத் இயக்குகிறார். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், அஜித்தின் 60 வது படமாக உருவாகவுள்ள இப்படம் பைக் ரேஸை மையமாக வைத்து உருவாகவுள்ளதால் நிச்சயம் இப்படம் அஜித்தின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவிக்கும் என அஜித் ரசிகர்கள் போனி கபூர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  
 
மேலும், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்தை ஒரு பைக் ரேஸராக பார்க்க அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments