அஜித் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் இதுவரை நடந்த நிலையில் அடுத்த கட்ட ஷுட் பாங்காங்கில் நடக்க உள்ளது.
அஜித்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
இந்த படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் பின்னர் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மேலும் தாமதம் ஆகி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் ரிலீஸாகும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு மோதும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் சீக்வென்ஸ் ஒன்றை படமாக்க பாங்காங் செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் வட இந்தியா முழுவதும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படக்குழு சில தினங்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.