அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.
துணிவு படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது. அது ரிலீஸாகி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் அடுத்த படம் தொடங்கப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் இப்போது அஜித் ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.
இனிமேல் படங்கள் மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்வதில் வேகமாக இருக்கப் போகிறாராம். தனது அடுத்த சில படங்களுக்கான பேச்சுவார்த்தையை இப்போதே தொடங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.