தல அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன
இந்த நிலையில் நேற்று அனைத்து இணைய தளங்களிலும் வெளியான ஒரு செய்தி என்னவெனில் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளார் என்பது தான். இதற்கு முன்னர் அஜித், வடிவேலு ஆகிய இருவரும் ’ராஜா’ என்ற படத்தில் 12 வருடங்களுக்கு முன்னர் நடித்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது
இந்த செய்தியை இயக்குனர் வினோத் அவர்கள் தற்போது மறுத்துள்ளார். என் படங்கள் அனைத்துமே சீரியஸான படங்கள், அதிலும் வலிமை படத்தில் காமெடிக்கு கொஞ்சம் கூட இடமே இல்லை, அப்படி இருக்கும்போது வடிவேலு எவ்வாறு என் படத்தில் நடிக்க முடியும்? என்று கேள்வி கேட்டவரிடம் எச்.வினோத் எதிர் கேள்வி கேட்டுள்ளார்
மேலும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் அஜித்தை தவிர இன்னும் வேறு எந்த நடிகரும் ’வலிமை’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அஜீத் நடிக்கவுள்ள வலிமை படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகி உள்ளது
மேலும் வலிமை படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்கும் என்ற தகவலையும் எச்.வினோத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது