நடிகர் அஜித் ஒரு காலத்தில் பல படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்து வந்தார்.
சில படங்களில் கதாநாயகர்களை விட குணச்சித்திர வேடத்திலோ அல்லது வில்லன் வேடத்திலோ நடித்தவர்கள் ஸ்கோர் செய்து விடுவார்கள். மௌனராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரம் முதல் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரை பல உதாரணங்களை சொல்லலாம்.
அஜித் ஒரு காலத்தில் பல படங்களில் நட்புக்காக சில கௌரவ வேடங்களில் நடித்து வந்தார். அதில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த படம் நி வருவாய் என. அந்த படத்தில் சுப்ரமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இயக்குனர் ராஜகுமாரன் அந்த படத்தில் பார்த்திபன் நடித்த கதாநாயகன் வேடத்தில் நடிக்க சொன்னபோது மறுத்துவிட்டாராம்.
ஏனென்றால் அந்த படத்தில் கதாநாயகி அந்த கதாபாத்திரத்தை வேண்டாம் என ஒதுக்கி விடுவார். இதுபோல மௌனராகம் படத்திலும் மோகன் கதாபாத்திரத்தை ரேவதி ஒதுக்குவார். அந்த படத்தில் கார்த்திக் கதாபாத்திரம்தான் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. அதுபோல நம் கதாபாத்திரம் அமைந்துவிடக் கூடாது என ஹீரோ கதாபாத்திரத்தை நிராகரித்தார்.