Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தை "சார்னு" மரியாதையோடு கூப்பிடச்சொன்ன ரசிகர்! பங்கமாக கலாய்த்த சித்தார்த்!

Advertiesment
Ajith fans
, செவ்வாய், 14 மே 2019 (12:52 IST)
சமூகவலைதளத்தில் அஜித்தை மரியாதையாக அழைக்க சொன்ன அஜித் ரசிகர் ஒருவரை நடிகர் சித்தார்த் மோசமாக கலாய்த்துள்ளார்.
 

 


சமீபத்தில் நிறைவடைந்த 12-வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபில் இறுதிப் போட்டியில் தோற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 
ஆனால் நடிகர் சித்தார்த்தோ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக  “என்ன ஒரு இறுதி ஆட்டம். நன்றாக ஆடினீர்கள் மும்பை இந்தியன்ஸ்.  “உண்மையிலேயே ரோகித் சர்மா ஒரு வெற்றிகரமான கேப்டன் வாழ்த்துகள் லெஜண்ட் என்று ட்விட் பதிவிட்டார்.
 
இந்த டீவீட்டை கண்ட அஜித் ரசிகர் ஒருவர், ஏங்க பொய் சொல்றீங்க, அவங்க உழைப்பை நம்பியா ஜெயிக்குறாங்க?.. என கூற, அதற்கு சித்தார்த், நீ அஜித்தை மதித்திருந்தால் கடின உழைப்பு என்ன  என்பதை கற்று கொண்டிருப்பாய். இல்லை என்றால் அஜித்தை  ரோல் மாடலாய் நீ வைத்திருப்பது பிரயோஜனம் இல்லை என பதிலளித்திருந்தார். 

Ajith fans

 
இந்த நிலையில் தற்போது மீண்டும் மற்றொரு அஜித் ரசிகர். "நீங்கள் முதலில் அஜித்தை சார் என்று கூப்பிட்டு மரியாதையுடன் பேசுங்கள் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ரீட்விட் செய்த சித்தார்த் வடிவேலு பாணியில் ‘ஆஹாஹன் ’என்று கலாய்த்து கமெண்ட் செய்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் சித்தார்த் மீது செம்ம கடுப்பில் இருக்கிறார்கள்.


Ajith fans

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷாலின் 'இரும்புத்திரை 2' படத்தில் அஜித் பட நாயகி!