Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்குமார் கழகம்… அரசியல் சார்பற்றது – ரசிகர்கள் வைத்த வித்தியாசமான போஸ்டர்!

அஜித்குமார் கழகம்… அரசியல் சார்பற்றது – ரசிகர்கள் வைத்த வித்தியாசமான போஸ்டர்!
, புதன், 23 பிப்ரவரி 2022 (19:15 IST)
அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை வெளியாகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்துக்காக அஜித் ரசிகர்கள் சென்னையில் வைத்துள்ள போஸ்டர் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை கிருஷ்ணவேணி திரையர்ங்கில் வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் ‘தமிழ்நாடு அஜித்குமார் கழகம்- அரசியல் சார்பற்றது’ என வைத்துள்ளனர். தனது ரசிகர்கள் தன் பெயரைப் பயன்படுத்தி அரசியலில் ஈடுபடுவது பிடிக்காததால் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரசிகர் மன்றங்களைக் கலைத்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைந்த நடிகை லலிதாவின் கடைசி படப்பிடிப்பு: வீடியோ வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி!